உகாண்டாவிற்கு பறந்தார் ரணில்
அணிசேரா நாடுகளின் (NAM), G77 மற்றும் சீனாவின் 3வது தெற்கு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க உகாண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் ரணில் தற்போது உகண்டாவின் கம்பாலாவிற்கு வருகை தந்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், உகாண்டா குடியரசின் அதிபர் யோவேரி முசெவேனியின் அழைப்பின் பேரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மாநாடு
இந்நிலையில், அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 19வது உச்சி மாநாடு உகாண்டாவில் உள்ள கம்பாலாவில் ஜனவரி 19 முதல் 20 வரை “பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
மேலும், 3வது G77-சீனா தெற்கு உச்சி மாநாடு ஜனவரி 21 முதல் 22 வரை கம்பாலாவில் நடைபெறவுள்ளது.