;
Athirady Tamil News

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-5) படங்கள் & வீடியோ..

0

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-5) படங்கள் & வீடியோ..

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களினால் தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரத்துவமடைந்த தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக,

அடிப்படை வசதிகள் குறைகளைக் கொண்ட மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வன்னி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் குடியிருப்பாளர்களுக்கும், இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் குறித்த கிராமங்களின் கிராமசேவையாளர், மற்றும் சமூக சேவையாளர்கள் ஒத்துழைப்புடன் வழங்கி வருகிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கப் பொங்கலுக்கான” பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்வாக மன்னார் அடம்பன் கருங்கண்டல் வண்ணாகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள அம்பாரவேல் பிள்ளையார் ஆலயத்தில் “மாணிக்கப் பொங்கலுக்கான” பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக வவுனியா எல்லப்பர் மருதங்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம், இத்திகுளம், முருகனூர், ஆனந்தபுரம், சமலங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற 54 குடும்பங்களுக்கு எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத் கட்டிடத்தில் “மாணிக்க பொங்கல்” என்ற கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு பொங்கல் பானை மற்றும் பொங்கட் பொருட்கள் வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது நிகழ்வாக வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மூன்றாவது நிகழ்வாக ஆச்சிபுரம் கிராமத்தை சேர்ந்த தேவையுடைய மக்களில் சிலருக்கு “மாணிக்கப் பொங்கல்” நிகழ்வை மையப்படுத்தி பொங்கல் பொருட்களுடன் பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து நான்காவது “மாணிக்கப் பொங்கல்” நிகழ்வாக நான்கு தினத்துக்கு முன்னர், கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர்.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா கோவில்குளம், கோவில்புதுக்குளம் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட அக்கிராம பொதுமக்கள் சிலருக்கும், கழகத்தின் உறுப்பினர்கள் சிலருக்கும் பொங்கல் பொதிகளுடன் கூடிய பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே

அடுத்து ஐந்தாவதும், இறுதியான “மாணிக்கப் பொங்கல்” நிகழ்வாக ஒட்டுசுட்டான். பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு முத்தையன்கட்டு ஜீவநகர் கிராமத்தில் அடிப்படை வசதிகளற்ற தேவையுடைய முப்பத்தைந்து குடும்பங்கள் இனம்காணப்பட்டு மூன்று தினத்துக்கு முன்னர் பொங்கல் பொருட்களுடன் கூடிய பொங்கல் பானைகள் வழங்கி வைக்கப்பட்ட்து. மேற்படிக் கிராமத்துக்கு போக்குவரத்து வசதிகளோ, அடிப்படைத் தேவைகளோ இல்லாத நிலையிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று இந்நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு. விஜிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்ற இந்தநிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பொறுப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரவிங்கம் காண்டீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு ஜீவநகர் கிராமத்தில் அம்மன் கோயில் பிரதம குருக்கள் மகோத்திரசர்மா அவர்களும், ஆலயத்தின் தலைவர் நாகையா அவர்களும், ஆலய செயலாளர் திருமதி. செல்வராணி அவர்களும், RDS தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்களும், கமக்கார அமைப்பு செயலாளர் திரு.பசுவதி அவர்களும் கழகத்தின் உறுப்பினர்கள் திரு.சுரேஷ், திரு.கோபி ஆகியோரும் இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்து பயனாளிகளுக்கு பொங்கல் பொதிகளை வழங்கி “மாணிக்கப் பொங்கலை” சிறப்பித்து இருந்தனர்.

வரவேற்புரை, விருந்தினர்கள் உரையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக் கொண்டபின் கருத்து தெரிவித்த அவ்வூர் பெண்கள், மற்றும் அனைத்து ஊர் கிராம மக்கள் “தைத்திரு நாளன்று” குழந்தைகளோடு பொங்கிமகிழ சந்தர்ப்பத்தை வழங்கிய, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும், இதற்கென நிதி உதவியளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்” நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நிதிப் பங்களிக்க உள்ளோர் விபரம் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை சார்பில்
பிரான்ஸ் மத்தியகுழு உறுப்பினர் தோழர்.ரங்கா, கிளைப் பொறுப்பாளர் தோழர்.சுகுமார், கிளையின் செயலாளர் தோழர்.தயாளன், கிளையின் நிதிப் பொறுப்பாளர் தோழர்.ஜெயந்தன் மற்றும் பிரான்ஸ் கிளைத் தோழர்களான சுதா, கேதீஸ், மட்டக்களப்பு தயா, சசி மற்றும் பிரித்தானியா மத்தியகுழு உறுப்பினர் தோழர்.அல்வின், பிரித்தானியா தோழர்.பாலா அண்ணர், கனடா தோழர் ஸ்ரீ எனும் கோபு, கழகத்தின் அமெரிக்கா கிளைப் பொறுப்பாளர் தோழர்.கோபி, சுவிஸ் தோழர்களான லெனின் எனும் செல்வபாலன், அன்ரன் எனும் லோகராஜா, ரமணன், பாபு எனும் சித்திரவேல், தேவண்ணர் எனும் தவராஜா, பிரபா எனும் கருணாகரன், ராசன், புவி, ரூபன் எனும் குமார், குழந்தை எனும் கைலாசநாதன் போன்றோர் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கழகத்தின் சுவிஸ் தோழர் ரஞ்சன் அவர்களின் திட்டமிடல், ஒழுங்குபடுத்தல், நிதிப் பங்களிப்பில் இந்நிகழ்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், தொடர்ச்சியாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனதார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
14.01.2024

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-5) வீடியோ..

வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-4) வீடியோ..

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-1) வீடியோ..

வவுனியா கிராமங்களில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-2) வீடியோ..

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) வீடியோ..

“புளொட்” உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் (கண்ணாடி)

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) படங்கள் & வீடியோ..

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) படங்கள் & வீடியோ..

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-1) படங்கள் & வீடியோ..

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-1) படங்கள் & வீடியோ..

வவுனியா கிராமங்களில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-2) படங்கள் & வீடியோ..

வவுனியா கிராமங்களில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-2) படங்கள் & வீடியோ..

வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-4) படங்கள் & வீடியோ..

வவுனியா கோவில்குளம் கிராமத்தில் , தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-4) படங்கள் & வீடியோ..

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.