அமெரிக்க அதிபரை புறக்கணிக்கும் இஸ்ரேல் பிரதமர்
காசாவில் போர் முடிவுக்கு வந்தவுடன் பலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்போன்றில் கலந்துக் கொண்ட போதே குறித்த விடயத்தை அவர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஹமாஸ் படைகள் மீதான முழு வெற்றியை எட்டும் வரையில் இந்த போர் தொடரும் எனவும் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அரசாங்கம்
அதேவேளை, இஸ்ரெலிய பணயக் கைதிகளை மீட்பதற்கும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டொபர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் இருந்து காசாவில் 25,000 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதொடு, சுமார் 85 சதவிகித மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தனது தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், போர் தொடர்பில் அர்த்தமுள்ள பேச்சுக்களில் ஈடுபடவும் கடுமையான அழுத்தத்தை இஸ்ரேல் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.
ஜோர்தான் ஆற்றின் மேற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பிலும் இஸ்ரேல் பாதுகாப்புக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும், இதில் எதிர்கால பலஸ்தீனிய அரசின் எல்லையும் அடங்கும் என்றார்.
இஸ்ரேலின் கடும்போக்கு நடவடிக்கை
இந்த உண்மையை அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை பலஸ்தீன எதிர்ப்புக்கு பயன்படுத்தியுள்ள நெதன்யாகுவின் கருத்து வியப்பளிக்கவில்லை.
இருப்பினும் காசா மீதான இஸ்ரேலின் கடும்போக்கு நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளை நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளதாகவே கூறப்படுகிறது.
போரின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயன்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்பியுள்ளது.
ஆனால் நெதன்யாகு அதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை, மேலும், சுமார் ஒரு மாத காலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமரையும் தொடர்புகொள்ள மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.