தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக சிறீதரன் வழங்கியுள்ள உறுதி
நிலத்திலும் புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டப் பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாக தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் நாளையதினம் (21.01.2024) நடைபெறவுள்ள நிலையில் அவரால் முன்வைக்கப்பட்டுள்ள செயல்நோக்கு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செயல்நோக்கு அறிக்கையில் மேலும், இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள மக்கள் கருதுவதாலேயே இந்த அழிப்பு இடம்பெறுகிறது.
சிங்கள அரச இயந்திரம்
சிங்கள – பௌத்த சித்தாந்தமும், ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதற்கான அரச இயந்திரமும் இந்த அழிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றன.
இந்நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்த அழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு கோட்பாட்டு அடிப்படையில் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
சமூக ஒப்பந்தம்
அரசியல் யாப்பு ரீதியாக வடக்கு – கிழக்கு இணைப்பு, சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை மற்றும் அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இது தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும்.
அதனடிப்படையில், கீழ்வரும் இலக்குகளை நோக்கியதாகவே எனது பயணம் அமையும் என்பதை தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.