திருகோணமலையில் 61 குதங்கள் குத்தகைக்கு
திருகோணமலை சீனன் குடாவிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களில் 61 குதங்களை திருகோணமலை முனைய நிறுவனத்துக்கு 50 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் குதங்கள் 16 வருட காலப்பகுதியில் 7 கட்டங்களாக அபிவிருத்தி செய் யப்படவுள்ளன. முதற் கட்டமாக ஒன்பது குதங்களிலிருந்து 1.75 கிலோமீற்றர் தூரத்துக்குக் குழாய்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எரிபொருள் குதங்களை புதுப்பிக்கும் செயற்பாடானது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமென டிரிங்கோ பெற்றோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான திறன் தங்களிடம் இருப்பதாகவும், இந்த நிலைமையானது பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், செலவைக் குறைக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கு களஞ்சிய வசதி தேவையில்லை எனின் சர்வதேச தரப்பினரின் களஞ்சிய தேவைக்காக இடத்தினை குத்தகைக்கு வழங்குவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் குதங்கள் 1938ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள பிரித்தானிய ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன.
நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படும் குறித்த குதங்கள் புனரமைக்கப்பட அவர் சுட்டிகாட்டியுள்ளார்.