பணயக் கைதிகளை அடைத்து வைத்திருந்த சுரங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் இராணுவம் அதிரடி
ஹமாஸ் அமைப்பினர் காசாவில் பணயக் கைதிகளை வைத்திருந்த சுரங்கப்பாதையொன்றை இஸ்ரேலிய வீரர்களை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்போது, கடந்த ஒக்டோபர் மாதம் 07 கடத்தப்பட்ட சுமார் 20 பணயக்கைதிகளை அடைத்து வைத்திருந்த ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையொன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்
அத்தோடு, நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தித்தின் போது இங்கு ஒரு குழந்தை உட்பட மக்கள் இங்கு பணயக்கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்துள்ளனர்.
மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கத்தில் சிறுவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் உறுப்பினரின் வீடு
அத்துடன், உலோகக் கம்பிகளுக்குப் பின்னால் ஐந்து குறுகிய அறைகள், கழிப்பறைகள், மெத்தைகளுடன் காணப்படும் குறித்த இடத்தின் புகைப்படங்களை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, காசாவில் கான் யூனிஸுக்கு தெற்கே உள்ள ஹமாஸ் உறுப்பினரின் வீட்டில் இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹகாரி தெரிவித்துள்ளார்.