வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்
மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிப்பால் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எத்ர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடாவில் ஆய்வு நிறுவனமொன்று நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மாதாந்த அடிப்படைச் செலவு
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் வரியில்லா சேமிப்பு கணக்குகளுக்கு கனடியர்களின் பங்களிப்பு குறைவடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
கனடியர்களின் மாதாந்த அடிப்படைச் செலவு 397 டொலர்களினால் அதிகரித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு
தற்போதைய பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் கனடியர்களில் பலர் நிதி நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக ஆடைகள் மற்றும் பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக செலவிடும் தொகையை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.