நயினை நாக பூசணி அம்மனுக்கு எண்ணெய் காப்பு ; புதன் கிழமை கும்பாபிஷேகம்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
அதனை முன்னிட்டு , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து நாளை மறு தினம் புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.