சுகாதார துறை முடங்கும் அபாயம் :விசேட வைத்திய நிபுணர்களும் வேலை நிறுத்தத்தில் குதிப்பு
மருத்துவர்களுக்கான இடர்கால கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எதிராக, நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி முதல் அகில இலங்கை ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களும்
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை 35 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், நிதி அமைச்சகத்தின் சில அதிகாரிகள் அதை இடைநிறுத்த முயற்சிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.