அயோத்தி ராமரை தரிசிக்க குவிந்த பக்தகோடிகள் : கூட்ட நெரிசலால் அவதி
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவிலை தரிசிக்க குவிந்த பக்தகோடிகளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அவதியுறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றுமுன் தினம் (22) அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் (23) அயோத்தி ராமர் ஆலயத்தில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடும் நெரிசல்
பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராமர் கோவிலை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணத்தால் கோவிலில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய முயற்சித்ததன் காரணமாக, சிலர் கீழே விழுந்துள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Heavy rush outside the Ram Temple as devotees throng the temple to offer prayers and have Darshan of Shri Ram Lalla on the first morning after the Pran Pratishtha ceremony pic.twitter.com/gQHInJ5FTz
— ANI (@ANI) January 23, 2024
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்ற நிலையில், குறித்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.