;
Athirady Tamil News

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி திரும்பிய யாழ்பெண்ணுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த எமன்

0

கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தில் யாழ் பாசையூரைசேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் பெண் பலி
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி, வீதியின் மறுகரைக்கு சென்று, எதிரே வந்து கொண்டிருந்த ஹைஏஸ் வாகனத்துடன் மோதியது.

கொழும்பு விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வாகனமே இதன்போது விபத்துக்குள்ளாகியது.

இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் படுகாயமடைந்த நிலையில் எழுந்து நிற்க முடியாமல் நடுவீதியில் நீண்டநேரமாக கிடந்தது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்த அதேசமயம் , இந்த விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.