;
Athirady Tamil News

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

0

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச அதிபர் செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரூபாயின் வலுவூட்டல்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது தான் இப்போது செய்ய வேண்டும்.

காய்கறிகள் போன்ற சில உணவுப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே வருகின்றன. ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல வலுவடைகிறது. வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது. அல்லது பொருட்களின் விலை மும்மடங்கு உயர்வுக்கு ஏற்றவாறு வருமானம் ஈட்ட வேண்டும்.

பொருட்களின் விலை உயர்வு
அரச ஊழியர்களின் சம்பளம் ரூ.10,000 அதிகரிக்கும். இது பொருட்களின் விலை உயர்வுக்கு கூட போதுமானதாக இல்லை. எனினும் இந்த ஆண்டு இதைத்தான் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும், பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.