;
Athirady Tamil News

800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள பதிவு

0

காசாவில் சுமார் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடம் ஒன்றின் மீது மோசமான தாக்குல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போரானது, 100 நாட்களை கடந்தும் இன்னும் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

அத்தோடு, பணயக் கைதிகள் பாரிமாற்றத்தின் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்தார்.

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை
போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை

உயிரிழப்புகள்
இந்நிலையில், பலஸ்தீன அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முகாமின் மீது டாங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள பதிவு | Attack On A United Nations Building In Gaza

இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

X பதிவு
இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் பேசிய போது, இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா ஏஜென்சியின் பயிற்சி மையத்தை இரண்டு டேங்க் ரவுண்டுகள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.


மேலும், உலக சுகாதார மையமும், ஐக்கிய நாடுகளின் UNRWA அமைப்பும் பயிற்சி மையத்தை அடைய முயற்சிக்கின்றன என்றும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.