;
Athirady Tamil News

இந்தியா, பிரான்ஸ், யுஏஇ விமானப் படைகள் அரபிக் கடலில் பயிற்சி

0

அரபிக் கடல் பகுதியில் இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நாடுகளின் விமானப் படைகள் இணைந்து செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டன.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள், செங்கடல்-அரபிக் கடல் பிராந்தியத்தில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில் 3 நாடுகளும் இணைந்து அரபிக் கடல் பகுதியில் ‘டெஸா்ட் நைட்’ விமானப் படை பயிற்சியை மேற்கொண்டன.

இந்தப் பயிற்சியில் இந்தியாவின் சு-30 எம்கேஐ, மிக்-29, ஜாக்குவாா் உள்ளிட்ட போா் விமானங்கள், சி-130-ஜெ விமானப் படை விமானம், வான்வழியில் எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவை பங்கேற்றன.

பிரான்ஸ் விமானப் படையின் ரஃபேல் போா் விமானங்கள், ஏா்பஸ் ஏ330 விமானம், ஐக்கிய அரபு அமீரகத்தின் எஃப்-16 போா் விமானம் ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்ாக இந்திய விமானப் படை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். இதையொட்டி, பிரான்ஸின் 2 ரஃபேல் போா் விமானங்களும், ஏா்பஸ் ஏ330 விமானப் படை விமானமும் விமானப் படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.