குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!
டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார்.
குடியரசு தினம்
நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
சிறப்பு விருந்தினர்
மேலும், குடியரசு தின விழாவில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவருக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.