;
Athirady Tamil News

வலுக்கும் காசா யுத்தம்: ஹமாஸ் வெளியிட்டுள்ள புதிய காணொளி

0

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், ஹமாஸ் தற்போது புதிய காணொளி ஒன்றைப் வெளியிட்டுள்ளது.

காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று இஸ்ரேல் பெண்கள் குறித்த காணொளியினையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் போர் தொடர்ந்து வருகிறது.

ஹமாஸ் தாக்குதல்
ஆரம்பத்தில் இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியது. . இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்க இஸ்ரேல், ஹமாஸ் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்பாக காசா மீது ஏவுகணை தாக்குதல் மட்டுமின்றி முழு வீச்சில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று இஸ்ரேல் பெண்கள் குறித்த காணொளியை ஹமாஸ் இப்போது வெளியிட்டுள்ளது.

 

இதற்கமைய காணொளியில் வரும் பெண்களில் இருவர் தாங்கள் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் என்றும், மூன்றாவது பெண் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த குடிமகன் என்றும் கூறுகின்றனர்.

சர்வதேச ஊடகங்கள் உறுதி
மேலும், இவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதைச் சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

குறித்த காணொளியில், கடந்த 107 நாட்களாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காசாவில் நடக்கும் இனப் படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சிறிது நேரத்திலேயே இந்த காணொளி வெளியாகியுள்ளது.

மேலும், தாக்குதலின் போது கடத்தப்பட்ட பணய கைதிகளை உடனடியாகவும் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் கூறியிருந்தது.

அத்தோடு இடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்கு மேலாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.