நேருக்கு நேர் கார், லொறி மோதியதில் 4 பேர் பலி
இந்திய மாநிலம் பஞ்சாபில் கார் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் நகரில் ஜம்மு – ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் லொறி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டது.
இதில் லொறி கவிழ்ந்ததுடன் கார் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இயற்கை எரிவாயுவால் இயங்கி வந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் அதில் சிக்கிக்கொண்டவர்கள் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.