;
Athirady Tamil News

இந்தியா – இலங்கை இணைப்பு வழித்தடம்! உயர்ஸ்தானிகர் வெளியிட்ட புதிய தகவல்

0

இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்தார்.

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2023 ஜூலை முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அத்துடன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளைத் தொடங்கப்பட்டது.

இந்தியா-இலங்கை இணைப்பு
இந்தநிலையில் தற்போது இந்தியா-இலங்கை இணைப்பு வழித்தடத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் இந்தியா பணியாற்றி வருவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருப்பதாகவும், அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இந்தியா இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவும் இலங்கையும் இயற்கையான பங்காளிகள் என்றும் அவை ஈடுசெய்ய முடியாதவை, இன்றியமையாதவை மற்றும் பிரிக்க முடியாதவை என்றும் ஜா குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு மின்சார ஏற்றுமதி
இந்தநிலையில் பாதுகாப்பு உட்பட்ட விடயங்களில் இலங்கையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையை இயலுமைப்படுத்த மின் கட்டண இணைப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

அதேநேரம்; இலங்கையில் மின்சார செலவைக் குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை மெய்நிகர் எல்என்ஜி (LNG) குழாய்களை அமைப்பதற்கும் இந்தியா பணியாற்றி வருவதாக ஜா தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.