விசா இன்றி பயணம் : தாய்லாந்து மற்றும் சீனாவின் புது முயற்சி!
தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி இரு நாடுகளுக்கும் பயணிப்பது தொடர்பான யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கான ஒப்புதல் நேற்றுமுன் தினம் (28) வழங்கப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் பர்ன்ப்ரீ பஹித்த-நுகாரா தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை
பாங்காக் நகரில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போது, இந்த நடவடிக்கைக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, உத்தியோகபூர்வ விஜயமாக தாய்லாந்து சென்றிருந்த போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணம்
இதன்படி, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பர்ன்ப்ரீ பஹித்த-நுகாரா கூறியுள்ளார்.