சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டணி: உத்தேசிக்கப்பட்ட புதிய சின்னம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றதாக அமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கூட்டணியின் சின்னம்
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பதிலாக இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்படி புதிய கூட்டணியின் சின்னமாக வெற்றிலைக்கு பதிலாக நாற்காலியை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.