ஜப்பான் செல்லப்போகும் அஸ்வெசும பயனாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அஸ்வெசும பயனாளர்கள் குழுவொன்றுக்கு ஜப்பானிய மொழிப் புலமையை கற்பித்து வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவால் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஸ்வெசும பயனாளர்களில் 3 இலட்சம் பேருக்கு தங்களை வலுவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
அத்தோடு, அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தில் சில திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கொடுப்பனவு தொடர்பில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.