சனத் நிஷாந்தவின் வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெப்ரவரி 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (31.1.2024) குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம்
இந்த மனுக்கள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது இறந்துவிட்டதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக எதிர்வரும் 2 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரியலால் சிறிசேன, விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.