;
Athirady Tamil News

கைத்தொலைபேசிகளூடான இரகசிய பணப்பரிமாற்றங்கள்; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

0

போதைப்பொருள் கொள்வனவின் போது கையடக்கத் தொலைபேசி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முறைமையை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இவ்விஷேட வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (31.01.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த (02.02.2024) பிற்பகல் 4 மணிமுதல் இரவு 8 மணிவரை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இவ்வாறு கையடக்கத் தொலைபேசி மூலம் பணத்தைப் பெற்றுக் கொடுக்கும்1964 நிலையங்களும் 2131 அனுமதி பெறாத தனியார் தொடர்பாடல் நிலையங்களும் reload and bill payment நடமாடும் உபகரணங்கள் காணப்படும் 1074 நிலையங்களும் அத்துடன் இனங்காணப்பட்டன.

வர்த்தக வங்கிக் கிளைகளுடனான 1202 இடங்களும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன.

இதன்போது 316 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட 11 பேரும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.