ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி., இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் Bharat Rice
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு சாமானிய மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளது.
குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அடுத்த வாரம் முதல் ‘Bharat Rice’ என்ற பெயரில் அரிசி 1 கிலோ ரூ.29க்கு விற்கப்படும் என உணவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,, அரிசி இருப்பு தொகையை அறிவிக்க வியாபாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலை நிர்ணயம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவு அமைச்சக செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.
இந்த ‘பாரத் அரிசி’ இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (NAFED), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) கேந்திரிய பந்தர் ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும்.
e-commerce தளங்கள் மூலமாகவும் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பொதிகளில் கிடைக்கும்.
முதற்கட்டமாக மத்திய அரசு சில்லரை சந்தைக்கு 5 லட்சம் டன் அரிசியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்கனவே ‘Bharat Atta’ என்ற பெயரில் கோதுமை மாவின் விலை ரூ. 27.50, ‘Bharat Dal’ என்ற பெயரில் பருப்பு வகைகள் தள்ளுபடி விலையில் ரூ.60க்கு விநியோகம் செய்யப்படுகிறது.