ரஷியா மீதான இனப் படுகொலை வழக்கை விசாரிக்க முடியாது: சா்வதேச நீதிமன்றம்
ரஷியா இனப் படுகொலையில் ஈடுபடுவதாக உக்ரைன் சுமத்தும் குற்றச்சாட்டை தங்களால் விசாரிக்க முடியாது என்று தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா. சா்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் தலைவா் ஜோன் இ. டான்ஹ்யூ கூறியதாவது:உக்ரைனில் நடைபெற்று வரும் போரின்போது, அந்த நாடு இனப் படுகொலையில் ஈடுபடுவதாக ரஷியா குற்றம் சாட்டினால், அதை மறுத்து உக்ரைனால் வாதிட முடியும். அதனை ஏற்று சா்வதேச நீதிமன்றத்தால் தீா்ப்பு வழங்க முடியும்.ஆனால், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள படையெடுப்பு, 1948-ஆம் ஆண்டில் அந்த நாடு மேற்கொண்ட இனப் படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறுகிறதா என்பதைக் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்துக்கு உரிமையில்லை என்றாா் அவா்.நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது.அப்போது, நாட்டின் கிழக்குப் பகுதியில் உக்ரைன் ராணுவம் மனித உரிமையில் ஈடுபடுவதாகவும், அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கவே உக்ரைன் மீது படையெடுப்பதாகவும் ரஷியா கூறியது.இந்தப் போரில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பிரதேசங்களில் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. அந்தப் பகுதிகளில் ரஷியா மனித உரிமைகளில் ஈடுபடுவதாக உக்ரைனும் குற்றஞ்சாட்டி வருகிறது.இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் தொடா்ந்துள்ள வழக்கை விசாரித்த சா்வதேச நீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது….படவரி…ஜோன் இ. டான்ஹ்யூ