புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு புத்தகப்பை
யாழ். வேலணை பிரதேச செயலகத்தினால் சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து 400 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வேலணை, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 11 மணிக்கும், புங்குடுதீவு சமுர்த்தி வங்கி வலயத்தில் மாலை 2 மணியளவில் இரு நிகழ்வுகளாக இடம்பெற்றன.
பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் F.C.சத்தியசோதி, கண்வைத்திய நிபுணர் வைத்தியர் சந்திரகுமார், Green Layer Environmental Organization இயக்குனர் P.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வில் மாணவர்களுக்கான புத்தகப் பைகளுடன் தென்னங்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.