இலங்கையில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் காலை பத்து மணிக்கு முன் எரிபொருளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விற்பனை
எரிபொருள் விற்பனை துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருவதால், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக எரிபொருளை வைப்பு செய்வது சிரமமாக இருப்பதால், விநியோகஸ்தர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளனர்.
ஆனால் இதுவரை கூட்டுத்தாபனததினால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.