நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்
தென்னிந்திய நடிகர் விஜயை சந்திக்க ராஜபக்ச குடும்பம் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் The Greatest Of All Time படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.
இலங்கையிலுள்ள கிரிக்கெட் மைதானம் மற்றும் விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக இந்திய திரைப்பட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பம்
இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தால், அவரை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளனர். அதற்கான முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலில் ஈடுபடும் விஜய்
இந்நிலையில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை விஜய் சந்தித்தால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலை ஏற்படும்.
அரசியலில் முழுநேரமாக ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இலங்கை விஜயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.