;
Athirady Tamil News

அமெரிக்காவில் மா்ம நபரால் தாக்கப்பட்ட இந்திய ஐ.டி. நிறுவன நிா்வாகி உயிரிழப்பு

0

அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் உள்ள ஹோட்டலின் அருகே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட இந்தியாவை பூா்விகமாகக் கொண்ட நபா் உயிரிழந்தாா்.

அவரைத் தாக்கியவா்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறையினா் அறிவித்துள்ளனா்.

உயிரிழந்த நபரின் பெயா் விவேக் தனேஜா என்றும் அவா் டைனமோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவா் என்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: வாஷிங்டன் நகரில் ஷோடோ மற்றும் அகேடோ ஆகிய ஜப்பான் ஹோட்டல்களுக்கு அருகில் விவேக் தனேஜா என்பவருக்கும் அடையாளம் தெரியாத நபருக்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் தனேஜா கடுமையாக தாக்கப்பட்டாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனேஜாவை மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் தலையில் பலத்த காயமடைந்திருந்ததையடுத்து அவா் சுயநினைவை இழந்திருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் பிப்ரவரி 7-ஆம் தேதி உயிரிழந்தாா் என்றனா்.

இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தாக்குதல் நடத்திய நபரின் முகம் பதிவானது. இதையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை போலீஸாா் வெளியிட்டனா். இதுவரை அடையாளம் தெரியாத அந்த நபரைக் கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பவா்களுக்கு 25,000 அமெரிக்க டாலா் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்தனா்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவா்கள், ஊழியா்கள் என அண்மைக் காலமாக பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி 7 போ் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.