மருத்துவ பணியாளர்களின் அலட்சியம்; அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்
கொவிட்பெருந்தொற்று காலத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவசரசேவை பிரிவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்களின் உதவி கிடைக்காததால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 வயது இலங்கையரான சச்சிந்த பட்டகொடகே நவம்பர் 2020இல் ஐந்து நாட்களில் மூன்று தடவைகள் அடிலெய்ட் ரோயல் மருத்துவமனைக்கு அழைப்புவிடுத்ததும் தனக்கு இருமல் உள்ளதாகவும் இருமும்போது இரத்தம் வருவதாக தெரிவித்ததுள்ளார்.
அதன் பின்னர் சில நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தமையும் மரணவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 2020 இல் அடிலெய்டிற்கு குடிபெயர்ந்த சச்சிந்த தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்த நிலையில், அண்ட்கு அவர் தச்சுதொழிலில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவ பணியாளர்களின் அலட்சியம்
இலங்கையர் மூன்றாவது தடவை ரோயல் அடிலெய்ட் மருத்துவமனைக்கு சென்றவேளை அவரது மனைவி தனது கணவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கேட்டார் என உளவள ஆலோசகர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தனது கணவர் உயிராபத்து குறித்து அச்சமடைந்துள்ளார் இரத்தம் பெருமளவிற்குவெளியேறியுள்ளது என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தனது கணவருக்கு மருத்துவ உதவிகளை வழங்குமாறு அவர் மன்றாடிய போதிலும் அது செவிமடுக்கப்படவில்லை என உளவள ஆலோசகர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மனைவி கணவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு உடனடியாக ஸ்கான் செய்யுமாறு கேட்டனர் ஆனால் அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என நீதிமன்றத்தில்தகவல் வெளியாகியுள்ளது.
தான் இருமல் இரத்தம் வெளியேறுவது போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதை காண்பிப்பதற்காக படங்களை எடுத்துவைத்திருந்தார் என்ற விபரமும் நீதிமன்றில் வெளியாகியுள்ளதுடன், மருத்துவமனையில் தனது இறுதி நிமிடங்களையும் அவர் படமாக்கியுள்ளார்.
மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த உயிரிழந்தவரின் மனைவி, கணவர் இரத்தவாந்தி எடுப்பதால் மருத்துவமனை பணியாளர்கள் தனது கணவரின் நிலை குறித்து தீவிரகவனம் செலுத்துவார்கள் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையின் உதவியை தொடர்ச்சியாக கோரியபோதும், மருத்துவ பணியாளர்கள் அலட்சியம்செய்ததால் அவர் உயிர்ழந்ததாக கூறப்படும் நிலையில் இலங்கையரின் மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவருவதாக கூறப்படுகின்றது.