;
Athirady Tamil News

மாலைத்தீவிலிருந்து 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

0

விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலைத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 83 பேர் உள்ளனர்.

இதற்கு அடுத்து 43 இந்தியர்கள், இலங்கைச் சேர்ந்த 25 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் வெளியேற்றப்பட்ட திகதி குறித்த விவரம் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அலி லகுசான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்த மாலைத்தீவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து பொருளாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழில்களும் அடங்கும். சில தொழில்கள் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது.

இதுபோன்ற தொழில் அமைப்புகளை மூடி, அதில் தொடர்புடைய வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியில் உள்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 186 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் சட்டவிரோத செயல்களை ஈடுபடுவதைத் தடுக்க வாரத்தில் மூன்று முறை வரை பொலிஸார் திடீர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைத்து இந்த சோதனை நடைபெறவில்லை’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.