;
Athirady Tamil News

அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு

0

புது தில்லி: தில்லியின் அலிபூர் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், அதன் உரிமையாளர் மீது தில்லி போலீசார் குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தில்லியின் அலிபூா் பகுதியில் உள்ள தயாள்பூா் சந்தையில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை 5.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து குறைந்தது ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனால், தீ மளமளவென முழு கட்டிடத்திற்கும் பரவியது.

இதையடுத்து, மேலும் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது .

இந்த விபத்தில் 10 ஆண்கள், ஒரு பெண் உள்பட 11 பேர் பலியாகினர், 4 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிஜேஆர்எம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு, இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பெயிண்ட் தொழிற்சாலை உரிமையாளர் அகில் ஜெயின் மீது இந்திய குற்றவியல் சட்டம்(ஐபிசி) பிரிவு 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) மற்றும் பிரிவு 308 (குற்றமில்லா கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்ல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.

தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேரில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலிபூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் கரம்வீர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.