;
Athirady Tamil News

உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை: முன்னேரும் ரஷ்ய படைகள்

0

உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்போது, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அவ்டியீவ்கா நகரம்(Avdiivka City), ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

குறித்த பகுதியில் கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் உக்ரைனின் வெடிமருந்து இருப்பு குறைவடைந்து வருவதகாவும் தெரியவந்துள்ளது.

போரின் மையப்புள்ளி
அவ்டியீவ்கா நகரம் 2014ஆம் ஆண்டு முதல் போரின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது.

டோனெட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் முக்கிய தொடருந்து மையத்திற்கு அருகே உள்ளது மற்றும் இரு தரப்பினருக்கும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெடிமருந்து பற்றாக்குறை
இந்நிலையில், அவ்டியீவ்கா நகரத்தை கைப்பற்றுவது கிழக்குப் போரில் ரஷ்யாவுக்கு மூலோபாய சாதகத்தை அளிக்கும் மற்றும் மேலும் பிரதேச ஆதாயங்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்க்பி அமெரிக்காவின் மதிப்பீட்டைத் தெரிவித்துள்ளதோடு, உக்ரேனின் வெடிமருந்து பற்றாக்குறை காரணமாக அவ்டியீவ்கா பாதிக்கப்படக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.