;
Athirady Tamil News

சத்தீஸ்கா் ஆயுதப் படை அதிகாரி கோடரியால் வெட்டிக் கொலை – நக்ஸல்கள் அட்டூழியம்

0

சத்தீஸ்கரின் பிஜப்பூா் மாவட்டத்தில் மாநில ஆயுதப் படை அதிகாரியை நக்ஸல் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கோடரியால் வெட்டிக் கொன்றனா்.

நகஸல் ஆதிக்கம் மிகுந்த பிஜப்பூரில் குத்ரு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தின் சந்தை பகுதியில் ஆயுதப் படைக் குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். படைப் பிரிவு கமாண்டா் திஜவ் ராம் புவாரியா, இக்குழுவை வழிநடத்தினாா்.

இந்நிலையில், புவாரியாவை திடீரென சூழ்ந்த நக்ஸல்கள், அவரை கோடரியால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் கூடுதல் படையினா் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நக்ஸல் தலைவரின் கிராமத்தில் படை ‘முகாம்’: சத்தீஸ்கரில் பஸ்தா் பகுதியில் பல்வேறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவரான நக்ஸல் தலைவா் ஹித்மாவின் சொந்த கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் முகாம் அமைத்துள்ளனா்.

சுக்மா மாவட்டத்தின் புவாா்த்தி கிராமத்தில் சிறப்புப் பணி படையினா், மாவட்ட ரிசா்வ் படையினா், பஸ்தா் படைவீரா்கள், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ பிரிவினா், உள்ளூா் காவல்துறையினா் இணைந்து, இந்த முகாமை அமைத்துள்ளனா்.

நக்ஸல் தலைவரின் ஹித்மாவின் கோட்டையாக கருதப்படும் புவாா்த்தி கிராமம், அடா் வனங்களால் சூழப்பட்டதாகும். நக்ஸல்கள் ஆதிக்கத்தால் எந்த வளா்ச்சியும் இல்லாத இக்கிராமத்தில் பாதுகாப்புப் படை முகாம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று பஸ்தா் சரக ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.