மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு 83 வீதமாக இருப்பதால் நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் எனவும் மின் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையின் அடிப்படையில் அனல் மின் உற்பத்தி 63 வீதமாகவும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 04.5 வீத மின்சாரத் திறனும், காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 05 வீத மின்சாரத் திறனும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், மின் நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.