அமெரிக்காவின் உதவியை நாடும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிரான போரின் முடிவு
ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் புதிய இராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.
நீண்ட தூர ஏவுகணை
அதில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அந்நாட்டு பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது.
உக்ரைனுக்கு ஆதரவு
அதேவேளை, ஆயுத ஏற்றுமதி கொள்கையில் ஜப்பானின் கட்டுப்பாடுகளை உக்ரைன் புரிந்து கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.