;
Athirady Tamil News

உலகின் மாபெரும் அனகோண்டா பாம்பு., அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிதான இனம்

0

உலகின் மிகப்பாரிய அனகோண்டா பாம்பு அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பாரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். அங்கிருந்து ஆய்வு, ஆராய்ச்சி என பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது அதே அமேசான் காட்டில் ராட்சத பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனகோண்டா குடும்பத்தைச் சேர்ந்த இந்த பாம்புகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

ஆனால் அளவில், அனகோண்டா பாம்பை விட இரண்டு மடங்கு பாரியது, இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பாரிய பாம்பு ஆகும்.

தெற்கு பச்சை அனகோண்டா (southern green anaconda) பாம்பு பற்றிய அனகோண்டா படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இப்போது வடக்கு பச்சை அனகோண்டா (northern green anaconda) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமேசான் காட்டில் National Geographic Expedition நடத்திய படப்பிடிப்பின் போது ​​இந்த மிக நீளமான பச்சை அனகோண்டா பாம்பு அமேசான் ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாம்பின் பின்புறம் முதல் தலை வரை ஒரு காணொளி உள்ளது. இந்த மிகப்பாரிய பாம்பு நீர் பகுதியில் வாழ்கிறது. தண்ணீரில் நகர்வது, உணவைக் கண்டுபிடிப்பது எளிது. எ அவ்வாறு தண்ணீர் பகுதியில் உள்ள பாம்பு மற்ற ராட்சத விலங்குகளால் தாக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
இந்த பாம்பின் காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது மிக நீளமான பாம்பு மற்றும் 500 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 26 அடிக்கு மேல் நீளமானது. இந்த அளவு பாம்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒரே ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது மிகவும் அரிதான வகை பாம்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தெற்கு பச்சை அனகோண்டா பாம்புகள் பிரேசில், பெரு, பொலிவியா மற்றும் பிரெஞ்சு கயானாவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அவை ஈக்வடார், கொலம்பியா, வெனிசுலா மற்றும் கயானாவின் வடக்குப் பகுதிகளிலும் தோன்றியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.