டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி.. 23 வயது விவசாயி உயிரிழந்த சோகம்!
ஹரியானா – பஞ்சாப் எல்லையில் நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த 23 வயது விவசாயி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஹரியானா-பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகள், தலைநகர் டெல்லிக்குள் நுழைய படையெடுத்தனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இதையும் மீறி உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, சுப்கரன் சிங் என்ற 23 வயது விவசாயி காயமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 2 பேர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விவசாயி உயிரிழந்திருப்பது, டெல்லி எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே டெல்லி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13ஆம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கின. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி செல்லும் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், நான்கு கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். தடையை மீறி ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரங்களுடன் எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர்.
ஹரியானா – பஞ்சாப் எல்லையான ஷம்புவில் குவிந்த விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இதனிடையே, அனைத்து கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கலாம் என விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா உறுதி அளித்துள்ளார்.