;
Athirady Tamil News

யாழ்.பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் – பேருந்தின் வழித்தட அனுமதி இரத்து

0

சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது.

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பேருந்தினால் பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை , சாரதி அவசரமாக பேருந்தினை நகர்த்திமையால் , அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார்.

அப்பெண்ணை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பேருந்தின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர்.

பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் , அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.