யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று இடமாற்றம்
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இயங்கி வந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் சிறுவர் நீதவான் நீதிமன்றில் இதுவரை காலமும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இயங்கி வந்ததுடன், அதன் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்திருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.