;
Athirady Tamil News

டுபாயில் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள்! அரசு எடுத்த நடவடிக்கை

0

டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் டுபாய் நாட்டுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தலைமறைவு
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் பின்னர், வெளிநாடுகளில் தலைமறைவாகிய 13 சந்தேகநபர்கள் கடந்த 21 ஆம் திகதி டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெலியத்த பகுதியில் ஐந்து பேரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு
இதன்படி, இந்த துப்பாக்கி சுட்டு சம்பவத்துடன் தொடர்புடைய உரகஹா மைக்கேல் உள்ளிட்ட 13 பேரையும் இலங்கைக்கு நாடு கடத்த சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களை திணைக்களத்தினர், டுபாய் காவல்துறையினர் மற்றும் சர்வதேச காவல்துறையினருடன் முன்னெடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.