புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது
கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயல் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம் சுமார் எட்டு அடி ஆழத்தில் புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பூசகர் எனவும் புதையல் தோண்டிய இடத்தில் இவர் பூஜைகளை நடத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.