இந்தியாவிலே மிக நீளமான கேபிள் பாலம்! பெயரில் மாற்றம்
இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமாக கருதப்படும் சுதர்சன் சேது என்ற நினைவுச்சின்ன கேபிள் பாலமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கபட்டுள்ளது.
ஓகா நிலப்பரப்பை குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகாவுடன் இணைக்கும் சுமார் 2.32 கிமீ நீளமுள்ள சுதர்சன் சேது என்ற நினைவுச்சின்ன கேபிள் பாலத்தையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.
முன்பு ‘கையொப்பம் பாலம்’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலமானது, தற்போது சுதர்சன் சேது எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
துவாரகாதீஷ் கோவில்
ஓகா துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள பெய்ட் துவாரகா, துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ஒரு தீவு ஆகும், இங்கு கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோவிலும் அமைந்துள்ளது.
மேலும், இந்தப் பலமானது சுதர்சன் சேது குடியிருப்பாளர்கள், யாத்ரீகர்கள் மற்றும் துவாரகதீஷ் கோயிலுக்கு வருபவர்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த போக்குவரத்து மார்க்கமாக அமையும் என கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களுக்கான போக்குவரத்தை எளிதாக்குவதுடன், படகு போக்குவரத்தில் ஏற்படும் சிக்கல்களை குறைப்பதை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
குஜராத்தின் வளர்ச்சி
சுமார் 978 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2.5 கிமீ நீளமான இந்தப் பாலம், பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் கிருஷ்ணரின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையுடன் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நடைபாதையின் மேல் பகுதியில் சூரியப்படல்களும் காணப்படுவதுடன் அதன் மூலமாக, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்தப் பாலம் பெரும் பங்காற்றும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.