சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்த தொடருந்து! இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா தொடருந்து நிலையத்தில் இருந்து சரக்கு தொடருந்தொன்று சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் பயணித்துள்ளது.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
சம்பவம்
இந்த தொடருந்தில் இருந்த சாரதி, தனது பணியை முடித்துக்கொண்டு கத்துவாவில் இறங்கியதால் வேறு சாரதியுடன் குறித்த தொடருந்து பஞ்சாப் செல்லவிருந்தது.
எனினும், சாரதி ஹேண்ட் பிரேக்கை முறையாக போடாமல் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு ஜலந்தர் பிரிவில் சாய்வான பாதையில் தொடருந்து நிறுத்தப்பட்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக சாரதி இன்றியே குறித்த தொடருந்து 70 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பயணித்துள்ளது.
விசாரணைகள்
இதனால் தொடருந்து சாரதி மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Breaking: Testing of India’s first driverless good train is a huge success. On the other hand, loco pilots are planning a strike against this move. pic.twitter.com/b0JqeEIRlc
— Venkat 🐶 (@snakeyesV1) February 25, 2024