;
Athirady Tamil News

இலங்கை செவ்விளநீர் 2000 ரூபாவிற்கு விற்பனை!

0

இலங்கையின் இளநீருக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் அதிக கேள்வி இருப்பதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிர்
இந்நிலையில் வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேவேளை இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வழங்கி வைத்தார்.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.

அதன்படி ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.