ஹெஸ்புல்லாஅமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்
லெபனானின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பிராந்திய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு நிகரான பதவியில் இருக்கும் சலாமி, தெற்கு லெபனான் கிராமமான மஜடேலில் வாகனம் ஓட்டும் போது குறிவைக்கப்பட்டார்.
சலாமி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ஹெஸ்புல்லா
சலாமி ஹெஸ்புல்லாவின் பிராந்திய தளபதியாக இருந்ததாகவும், வடக்கு இஸ்ரேலில் படையினர் மற்றும் இஸ்ரேலிய சமூகங்கள் மீதான தாக்குதல்களை மேற்பார்வையிட்டதாகவும் இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சலாமி கொல்லப்பட்டதை ஹெஸ்புல்லா உறுதிப்படுத்திய அதேவேளை அவர் தளபதியா என்ற தரவரிசையை வெளியிடவில்லை