;
Athirady Tamil News

1250 ஆண்டுகால ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

0

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களும் பங்கேற்கலாம் என அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு.

“ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும் இந்த திருவிழா ஜப்பானின் ஜச்சி மாகாணத்தின் இனோசாவா நகரில் கொனோமியா வழிபாட்டு தலத்தில் நடந்து வருகிறது.

திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள்
ஜப்பானியர்களின் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.

எனினும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் ‘ஹாப்பி கோட்ஸ்’ என்று அழைக்கப்படும் ஜப்பானியர்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொள்வர். பின்னர், துணியால் மூடப்பட்ட புல்களை அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்களின் கைகளால் தூக்கி கொண்டு கோவில் சன்னிதானத்திற்கு எடுத்து செல்வர்.

இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் குறைந்தபட்ச ஆடைகளை மட்டுமே அணிவர். இந்த விழாவின் நோக்கம் தீய குணங்களை விலக்குவது தான். அத்துடன், அதிர்ஷ்டத்தினை அடைவதாகும்.

ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கும்
இது நிர்வாண திருவிழா என்று பெயரிடப்பட்டிருந்தாலும் முழுமுழுக்க சடங்கு ரீதியான நிகழ்வுதான். அர்ச்சகர், இரண்டு அதிர்ஷ்ட்ட குச்சிகளை கொண்ட 100 கிளை பண்டல்களை தூக்கி வீசுவார். அந்த அதிர்ஷ்ட்ட குச்சியை கண்டுபிடிக்கும் ஆண் யாரோ, அவரை தொடுகிறவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுதான் இவர்களின் நம்பிக்கை.

மேலும் தீயசக்திகளை விரட்டும் நோக்கிலும் இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.