ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை விஸ்தரிக்க திட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடுகளை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மகளிர் மாநாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஏற்பாட்டில் அண்மையில் கண்டியில் நடைபெற்றிருந்தது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை
அதில் கணிசமான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வாறான மாநாடுகளை நாடு தழுவிய ரீதியில் நடத்த அக்கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பெண்களின் வாக்குகளே திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.