நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கிய உறுதிமொழி
வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு இனி வரும் காலங்களில் யாரேனும் ஒரு நபர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டால், அது தொடர்பான முறைப்பாட்டின் உள்ளடக்கம் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதியழித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்று (27.02.2024) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் தேசபந்து குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
நீதியரசர்கள்
இந்நிலையில், முறைப்பாடு தொடர்பான வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு ஒருவர் அழைக்கப்பட்டால், முறைப்பாட்டு உள்ளடக்கம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதாக அவர் உச்ச நீதிமன்றில் உறுதியளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், எதிர்வரும் காலங்களில் இது தொடர்பான சுற்றறிக்கையின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.
மேலும் குறித்த மனுவை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுளளது.