சாந்தனின் உடலம் நாட்டுக்கு வருவது தொடர்பில் உறவினர் வெளியிட்ட தகவல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திரும்பிவர காத்திருந்த சாந்தன் நேற்றையதினம் சென்னையில் உயிரிழந்தமை ஈழத்தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சாந்தனின் உடலம் தாயகத்திற்கு இன்று எடுத்துச்செல்லப்படவு ள்ள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
மகனை காண காத்திருக்கும் தாய்
எனினும் அந்த தகவலில் உண்மையில்லை என்றும், வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அதாவது நாளைய தினமே உடலை எடுத்துச் செல்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக உயிரிழந்த சாந்தனின் சகோதரர் மதிசுபா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
32 ஆண்கள் சிறாஇயில் இருந்த மகனை காண யாழ்ப்பாணத்தில் சாந்தனின் தாயார் ஆவலாக காத்திருந்த வேளை இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.